விதை நேர்த்தி:
(i) பூசணக்கொல்லி விதை நேர்த்தி:
விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண
நோய்களை தடுக்க கார்பன்டசிம் அல்லது கேப்டான் அல்லது டிரைசைக்ளோசோல்
மருந்தை 2.0 கி/கிகி விதை என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.
அல்லது சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் என்ற
உயிர் பூசணக்கொல்லியை 10 கி/கிகிவிதைஎன்ற அளவில் பயன்படுத்தலாம்.
(ii) உயிர் உர விதை நேர்த்தி:
ஓர் எக்டருக்கு தேவையான அளவு
விதையுடன் 600 கி அசோஸ்பைரில்லம் மற்றும்600 கி பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை1200 மிலி ஆறிய அரிசி கஞ்சி சேர்த்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
(iii) முளைகட்டுதல்:
விதை நேர்த்தி செய்த விதைகளை ஓர்
இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, நீரைவடிகட்டி, கோணிப்பையிலிட்டு ஓர் இரவு
முழுவதும் இருட்டறையில் வைத்து முளைகட்ட வேண்டும்.
இவ்விதைகளை தயார் செய்த
நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
Comments
Post a Comment